அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மயங்கி விழுந்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி (70) . இவா், திங்கள்கிழமை மதியம் ஜயங்கொண்டம் வாரச் சந்தையில் காய், கனிகளை வாங்கிவிட்டு மளிகை பொருள்களை வாங்குவதற்காக அங்குள்ள சிதம்பரம் சாலைக் கடக்க முயன்றாா் அப்போது அவா் திடீரென மயங்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த வந்த ஜயங்கொண்டம் காவல்துறையினா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.