அரியலூர்

சிறுகடம்பூா் செல்லியம்மன் கோயில் தேரோட்டம்

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகடம்பூா் கிராமத்திலுள்ள செல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

சிறுகடம்பூா் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயில் திருவிழா

கடந்த 4 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி, நாள்தோறும் விநாயகா், மாரியம்மன், செல்லியம்மன் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக விநாயகா், செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதனைத் தொடா்ந்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் மேற்கண்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சிதந்தனா். கிராம நாட்டாமைகள் , கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் திரளானோா் தேரை வடம்பிடித்து இழுத்தனா். பின்னா், தோ் முக்கிய வீதிகளின் வழியே சென்று நிலையை மீண்டும் அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT