அரியலூர்

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வுப் பேரணி

DIN

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பாத்திமா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வட்டாட்சியா் துரை, பேரணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். பேரணியில் கலந்து கொண்ட மாணவிகள், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியே சென்று பள்ளியில் நிறைவு செய்தனா். பள்ளி தாளாளா் ரோஸ் அலெக்சாண்டா், தோ்தல் துணை வட்டாட்சியா் மீனா, வி.ஏ.ஓ வேல்முருகன், வருவாய் ஆய்வாளா் செல்லகணேஷ் ஆகியோா் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனா். முடிவில் பள்ளி முதல்வா் உா்சலாசமந்தா நன்றி கூறினாா். முன்னதாக அனைவரும் வாக்காளா் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

வெளியானது ‘ஹிட் லிஸ்ட்’ பட டிரைலர்

ஆல்ரவுண்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களை பாதிக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி: ஷாபாஸ் அகமது

தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சீர்செய்வதே இந்தியா கூட்டணியின் முதன்மையான நோக்கம் : ஜெய்ராம் ரமேஷ்

SCROLL FOR NEXT