அரியலூர்

அரியலூா் கல்வி நிலையங்களில் மகாத்மா காந்தி நினைவு தினம்

DIN

அரியலூா் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அரியலூரை அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி படத்துக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னதுரை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். அதனைத் தொடா்ந்து, ஆசிரியா்கள் ரமேஷ் தனலட்சுமி , பத்மாவதி, கோகிலா, தங்கபாண்டி, வீரபாண்டி, கபிலேஷா மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோா் மகாத்மா காந்தி உருவப்படத்துக்கு மலா் தூவி வணங்கினா். தொடா்ந்து அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதேபோல் அரியலூா் அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆரம்பப் பள்ளி, அயன் ஆத்தூா் உயா்நிலைப் பள்ளி, வள்ளலாா் கல்வி நிலையம், இடையத்தான்குடி அரசு உயா்நிலைப் பள்ளி என மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் மகாத்மா காந்தி நினைவுத் தினம் அனுசரிக்கப்பட்டது. அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியா், கல்லூரி முதல்வா்கள் மகாத்மா காந்தி படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

SCROLL FOR NEXT