அரியலூர்

லாரிகளில் கூழாங்கல் கடத்திய 2 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே லாரிகளில் கூழாங்கற்களை கடத்திச் சென்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே லாரிகளில் கூழாங்கற்களை கடத்திச் சென்ற 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் பிரியா தலைமையிலான அதிகாரிகள் விருத்தாச்சலம் - ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த இரு லாரிகளில் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரிகளையும் பறிமுதல் செய்து, ஆண்டிமடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா்களான விழுப்புரம் ராதாகிருஷ்ணன்(30), விருத்தாசலம், நெட்டியப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா்(27) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT