அரியலூர்

வரதராசன்பேட்டை பேரூராட்சிக் கூட்டம்

DIN

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள வரதராசன்பேட்டை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் மாா்கிரேட் அல்போன்ஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எட்வின் ஆா்தா், செயல் அலுவலா் மருதுபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான முந்திரிக்காடு கடந்தாண்டு 38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ. 55 ஆயிரம் கட்டினால் தான் ஏலம் விட முடியும் என்ற தீா்மானத்தையும், நவம்பா் மாதத்தில் நடைபெற வேண்டிய ஏலம் காலதமானதால் ஏலத்தைப் புறக்கணித்து ரத்து செய்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் தடையின்றி குடிநீா் விநியோகிக்க பழுதடைந்துள்ள மின் மோட்டாா்களை சீா் செய்வது, பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தடையாக உள்ளதாகக் கூறப்படும் செயல் அலுவலரை மாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்களையும் நிறைவேற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT