அரியலூா் அருகே கஞ்சா விற்ற இளைஞா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
அரியலூரை அடுத்த வாலாஜா நகரம் ராஜீவ் நகா், மின்நகா் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, அரியலூா் காவல் துறையினா் வியாழக்கிழமை அங்கு வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்தவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா் வாலாஜா நகரத்தைச் சோ்ந்த தங்கத் தமிழன் (20) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து, அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.