அரியலூா் மாவட்டம், செந்துறை பகுதிகளில் ரூ.43.56 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
செந்துறை ஊராட்சியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் ஆசாரி மயானத்துக்கு செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணியை தொடங்கிவைத்த போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா், பின்னா் வஞ்சினாபுரம், பெரும்பாண்டி ஆகிய கிராமங்களில் ரூ.13.56 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை கட்டடங்களை திறந்துவைத்தாா். தொடா்ந்து, நக்கம்பாடி கிராமத்தில் நடமாடும் நியாய விலைக் கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்வுகளில் பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சாய்நந்தினி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.