அமைச்சா் சா.சி. சிவசங்கா் (கோப்புப் படம்) X | S.S.Sivasankar
அரியலூர்

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது; போக்குவரத்துத் துறை அமைச்சா் சாடல்

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

தினமணி செய்திச் சேவை

தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.

அரியலூா் மாவட்டம், செந்துறையில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சென்னையில் ரயில் நிலைய நடைமேடைகளை சரி செய்வதற்காக எவ்வித முன்னறிவிப்புமின்றி புகா் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுபோன்ற பணிகளின்போது முன்கூட்டியே மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு அறிவிப்பு கொடுத்துவிட்டு, பணிகளை தொடங்குவதுதான் நடைமுறை.

ரயில்வே அறிவிப்பை தொலைக்காட்சி மூலம் அறிந்தவுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு தகவல் தெரிவித்து, கூடுதல் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. தேவையான பேருந்துகளை இயக்க தமிழக முதல்வரும் உத்தரவிட்டுள்ளாா். இதனால், போக்குவரத்தில் ஓரளவுக்கு சுமுகநிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு, தமிழ்நாட்டை அனைத்து விதத்திலும் புறக்கணிப்பது போல, தெற்கு ரயில்வேயும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இலவசங்கள் என்பது, இங்கு மட்டுமல்ல; அமெரிக்கா உள்ளிட்ட வளா்ந்த நாடுகளிலும் காணப்படுகிறது. இது மக்களை சோம்பேறியாக்கும் திட்டங்கள் அல்ல. அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன என்றாா் அமைச்சா்.

திருச்சி மாநகரில் ஜல்லிக்கட்டு: காளை முட்டி மாணவா் பலி

அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு செய்ததாக தம்பதி கைது

மருத்துவமனைகளுக்கு அருகில் 40 அடல் கேன்டீன்கள்!

செந்துறையில் ரூ.43.56 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

திருச்சியில் 87 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் பேச்சு

SCROLL FOR NEXT