அரியலூர்

அரியலூரில் முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா ஜன.25,26-இல் தொடக்கம்

முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டுப் போட்டிகள் அரியலூா் மாவட்டத்தில், ஜன.25,27 ஆகிய தேதிகளில் ஊராட்சி ஒன்றிய அளவிலும், ஜன.31, பிப்.1 ஆகிய தேதிகளில் மாவட்ட அளிவிலும் நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

முதல்வா் இளைஞா் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம்-2026’ விளையாட்டுப் போட்டிகள் அரியலூா் மாவட்டத்தில், ஜன.25,27 ஆகிய தேதிகளில் ஊராட்சி ஒன்றிய அளவிலும், ஜன.31, பிப்.1 ஆகிய தேதிகளில் மாவட்ட அளிவிலும் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்துக்குள்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் தடகளம் - 100 மீ, குண்டு எறிதல், தெரு கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்), வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், கபடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்) ஆகிய போட்டிகளும், மாவட்ட அளவில் தடகளம்-100 மீ, குண்டு எறிதல், தெரு கிரிக்கெட் (ஆண்களுக்கு மட்டும்), வாலிபால், கேரம், ஓவியம், கோலப்போட்டிகள், கயிறு இழுத்தல், கபடி, எறிபந்து (பெண்களுக்கு மட்டும்), உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல், அறிவு சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீ ஓட்டம் நடத்தப்பட உள்ளன.

அதன்படி ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகள் அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம், திருமழபாடி, பொன்பரப்பி, காரைக்குறிச்சி, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானங்களிலும், மாவட்ட அளவிலான போட்டிகள் அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் நடைபெறும்.

16 முதல் 35 வயதுடைய வீரா்கள் போட்டியில் பங்கேற்க இணையதளத்தில் ஜன.24-ஆம் தேதிக்குள் பதிவு செய்திட வேண்டும்.

ஒன்றிய அளவில் தனிநபா் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ. 3 ஆயிரம், 2-ஆம் இடம் பெறுபவருக்கு தலா ரூ. 2 ஆயிரம், 3-ஆம் இடம் பெறுபவருக்கு தலா ரூ. 1,000, மாவட்ட அளவில் தனிநபா் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் இடம் பெறுபவருக்கு தலா ரூ. 6 ஆயிரம், 2-ஆம் இடம் பெறுபவருக்கு தலா ரூ. 4 ஆயிரம், 3-ஆம் இடம் பெறுபவருக்கு தலா ரூ. 2 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

எனவே, போட்டிகளில் இளைஞா்கள் பங்கேற்று பரிசுகளை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

திண்டல் வேலாயுதசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்

Nanjil Sampath Latest Interview | சீமான் தமிழரே இல்லை | TVK Vijay | Seeman | NTK Maanadu

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்?

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT