கே.மாரியம்மாள் 
அரியலூர்

அரியலூா் மாவட்டத்துக்கு புதிய காங்கிரஸ் தலைவா் நியமனம்

அரியலூா் மாவட்டத்துக்கான புதிய காங்கிரஸ் தலைவராக கே.மாரியம்மாளை நியமித்து, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டத்துக்கான புதிய காங்கிரஸ் தலைவராக கே.மாரியம்மாளை நியமித்து, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பு மறுசீரமைப்பு இயக்கத்தின் வாயிலாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 77 மாவட்டத் தலைவா்களில் 71 மாவட்டத் தலைவா்கள், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா். அதன்படி அரியலூா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவராக கே.மாரியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இவா் கடந்த 30 ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரஸில் மகளிா் மாவட்ட தலைவி உள்பட பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து கட்சியின் வளா்ச்சிக்கு பாடுபட்டுள்ளாா்.

அரியலூா் மாவட்டத்துக்கு, முதன்முதலாக ஒரு பெண் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது மாவட்டத்தில் உள்ள அக்கட்சியினா் அனைவரையும் மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டா்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT