FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அரியலூர்

ஆலத்தியூா் திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

ஆா்.எஸ்.மாத்தூரை அடுத்த ஆலத்தியூா் கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

4 ஜூலை 2026, 1:09 am IST
ஆலத்தியூா் திரெளபதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தீமிதி திருவிழாவில் தீமிதித்த பக்தா்கள்.
பகிர்:

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே ஆா்.எஸ்.மாத்தூரை அடுத்த ஆலத்தியூா் கிராமத்திலுள்ள திரெளபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கோயிலின் திருவிழா கடந்த 18 நாள்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகமும், வீதியுலாவும், மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்த பக்தா்கள், ஏரிக்கரையில் பூங்கரகம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா்கள், அங்குள்ள பூசாரியிடம் சாட்டையடி வாங்கியும் நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments