கரூர்

நூறு நாள் பணியாளர்களுக்கு சம்பள பாக்கி: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் க. பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி மன்ற அலுவலக முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்க முன்னாள் ஒன்றியச் செயலாளர் குப்பம் கந்தசாமி தலைமை வகித்தார். முன்னாள் நிர்வாகி பெரியதம்பி, சிபிஐஎம் ஒன்றிய செயலாளார் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட தலைவர் முத்துசெல்வன், ஜனநாயக வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. எனவே நிலுவையிலுள்ள சம்பளப் பாக்கியை உடனே வழங்க வேண்டும். குப்பம் கிராமத்தில் பாதி பணியாளர்களுக்கு வேலை வழங்கவில்லை.
ஜாப் கார்டு வழங்காதவர்களுக்கு உடனே கார்டு வழங்கி பணி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT