கரூர்

குடிநீர் கோரி தாந்தோணிமலையில் பொதுமக்கள் சாலை மறியல்

DIN

குடிநீர் கேட்டு தாந்தோணிமலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கரூர் - திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 கரூர் நகராட்சிக்குட்பட்ட 47-ஆவது வார்டில் உள்ள தாந்தோணிமலை வாஞ்சிநாதன் நகர், தென்றல் நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு நகராட்சி மூலம் காவிரிக்கூட்டுக்குடிநீர் திட்டத்த்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சாதாரண உபயோகத்திற்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 35 நாட்களாக அப்பகுதியினருக்கு காவிரிக்குடிநீரும்,  ஆழ்குழாய் நீரும் விநியோகிக்கப்படவில்லையாம். இதனால் குடிநீருக்காக அன்பு நகர் பகுதியில் உள்ள காவிரிக்கூட்டுக்குடிநீர் குழாய் ஏர் வால்வில் இருந்து வெளியேறும் குடிநீரை  குடிநீருக்காகவும், சாதாரண உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர். சில நேரங்களில் ஏர் வால்வில் இருந்தும் தண்ணீர் வராததால் விலைக்கொடுத்து குடிநீரை வாங்கி வந்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதியினர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கூறியும் இதுவர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் திங்கள்கிழமை காலை கரூர்-திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த பசுபதிபாளையம் போலீஸார் மற்றும் நகராட்சி உதவி பொறியாளர் நக்கீரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலைக்குள் குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT