கரூர்

பள்ளபட்டி பேரூராட்சியில் சீராககுடிநீர் விநியோகிக்க வலியுறுத்தல்

DIN

பள்ளபட்டி பேரூராட்சி பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகிக்கப்படாததால் அப்பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கரூர் மாவட்டம் பள்ளபட்டி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கென்று நொய்யல் மராபாளையத்திலிருந்து காவிரி கூட்டுக்குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் கடந்த 3 மாத காலமாக காவிரி விநியோகிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது ரமலான் பண்டிகை வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், குடிநீரின்றி இப்பகுதியினர் கடும் அவதியுறுகின்றனர்.
இதுகுறித்து பள்ளபட்டி பேரூராட்சி அலுவலர்களிடம் தொலைபேசியில் கேட்டபோது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT