கரூர்

குழந்தை தத்தெடுத்தல் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம்

DIN

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் கரூர் கஸ்தூரிபா காந்தி தாய் - சேய் மருத்துவமனையில் குழந்தையை முறையாக தத்தெடுத்தல் குறித்த விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தலைமை வகித்து குழந்தை இல்லாத பெற்றோர், குழந்தையை முறையாக தத்தெடுப்பது மற்றும் குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அறிவிப்பு பலகையைத் திறந்து வைத்து தத்தெடுப்பு குறித்த துண்டுப்பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதுதொடர்பாக ஆட்சியர் மேலும் கூறியதாவது:   குழந்தையை முறையாக தத்தெடுப்பதற்கும், 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகள் பிரசவத்துக்கு  அனுமதிக்கப்பட்டாலோ,குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளோ, குழந்தைத் திருமணமோ,
சிசுவின் பாலினம் அறியப்படுவதோ, குழந்தைத் தொழிலாளரோ, பாலியல் ரீதியான துன்புறுத்தலோ கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 04324 -257056 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
நிகழ்ச்சியில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், மருத்துவப்பணிகள் துணை இயக்குநர் விஜயகுமார்,சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் நளினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சு. கவிதா, வட்டாட்சியர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT