கரூர்

மாவட்டத்தில் பரவலாக மழை: மைலம்பட்டியில் அதிகபட்சமாக 50 மி.மீ., பதிவு

DIN

கரூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மைலம்பட்டியில் 50.50 மீ.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நிகழாண்டில் கடும் வறட்சியை சந்தித்துள்ளது.
இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கரூர் பரமத்தியில் 109 டிகிரியையும் வெப்பம் தாண்டியுள்ளது. இந்நிலையில் கோடை மழை பெய்து பூமியை குளிர்விக்காதா என மக்கள் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கோடையின் வெப்பம் ஓரளவுக்கு தணிந்துள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்):
கரூர்- 16.30, அணைப்பாளையம்- 8.20, கே.பரமத்தி- 14, குளித்தலை- 7, தோகைமலை- 5, கிருஷ்ணராயபுரம்- 2, மாயனூர்- 10, பஞ்சப்பட்டி- 38.60,  கடவூர்- 18.20, பாலவிடுதி- 27.20, மைலம்பட்டி- 50.50. என மொத்தம் 197 மி.மீ.மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT