சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் நாளை ஆய்வு
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளஉள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் கரூர் மாவட்டத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளஉள்ளனர்.
சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். செம்மலை தலைமையிலான இக்குழுவினர், கரூர் மாவட்டத்தில் உள்ள பொது
நிறுவனங்கள் மற்றும் கனிமவளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட துறைகளில் ஆய்வு மேற்கொள்ளனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியரக் கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் தணிக்கை நடவடிக்கைகள், மேற்கொண்ட, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், அடிப்படை வசதிகள் போன்றவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.