கரூர்

வன உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை

DIN

வன உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கரூர் மாவட்ட  வன அலுவலர். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
பொங்கலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பாரி வேட்டை என்ற பெயரில் வன உயிரினங்களான முயல், கீரிப்பிள்ளை, குள்ளநரி, அணில், உடும்பு மற்றும் பிற வன உயிரினங்களை சிலர் வேட்டையாடுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. 
அவ்வாறு வேட்டையாடுவது இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம். இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்படும். 
யாராவது வேட்டையாடுவது குறித்து தெரியவந்தால் உடனே 94434-96218, 98421-26651 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT