கரூர்

தந்தையை எரித்து கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த மகன் கைது

DIN

கரூர் அருகே சொத்துக்காக தந்தையை எரித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த அவரது மகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
கரூர் அருகிலுள்ள வாங்கலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க அலுவலர் கந்தசாமி (72). இவருக்கும், இவரது மகன் தங்கவேலுக்கும் (40) சொத்துத் தகராறு இருந்து வந்ததாம். 
கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த கந்தசாமி மீது தங்கவேல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த கந்தசாமி கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து,  தங்கவேலைத் தேடி வந்தனர்.  செவ்வாய்க்கிழமை இரவு வாங்கல்- மோகனூர் காவிரியாற்றுப் பாலத்தில் தங்கவேல் நடந்து செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT