கரூர்

ஈசநத்தம் பாலம்,நில அளவர் அலுவலகம் திறப்பு

DIN

கரூர் மாவட்டத்தில் ஈசநத்தம் சாலையில் ரூ.80லட்சத்தில்  பாலம், பஞ்சப்பட்டியில் ரூ.15.36லட்சத்தில் கட்டப்பட்ட  நில அளவருக்கான அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தார்.
அரவக்குறிச்சி ஒன்றியத்தில் கரூர் - ஈசநத்தம் - கூம்பூர் - வேடசந்தூர் சாலையில் உள்ள பாலம் தாழ்வாக இருந்ததால், மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
 இதனால் அங்கு புதிய பாலம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை அடிப்படையில், நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.80லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட  முதல்வர் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், 15.40 மீ. நீளமும், 10.50மீ. அகலமும் கொண்டதாக புதிய பாலம் கட்டப்பட்டது.
 இந்தப்பாலம் மூலம் நந்தனூர், வெஞ்சமாங்கூடலூர், கரும்பரப்பு, வெடிக்காரன்பட்டி மற்றும் பாகநத்தம் செல்லும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன் பெறுவர்.
இதுபோல, கிருஷ்ணராயபுரம் வட்டத்திலுள்ள பஞ்சப்பட்டியில் ரூ.15.36லட்சம் மதிப்பில்  நில அளவருக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.
புதிய பாலம் மற்றும் அலுவலகத்தை  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து பாலத்தை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதேபோல, பஞ்சப்பட்டியில் கட்டப்பட்டுள்ள  நிலஅளவர் அலுவலகத்துடன்கூடிய குடியிருப்புக் கட்டடத்தை குளித்தலை வருவாய்க் கோட்டாட்சியர் எம்.லியாகத் பார்வையிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
 கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் சந்தியா, நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் மா.பழனிக்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் (நபார்டு)மஞ்சுளா, வட்டாட்சியர் பழனிக்குமார்(கிருஷ்ணராயபுரம்) உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT