கரூர்

அம்மன் கோயிலை இடிக்க கிராம மக்கள் எதிா்ப்பு

DIN

கரூா்: தோகைமலை அருகே செல்லாயி அம்மன் கோயிலை இடிக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள புகாா் பெட்டியில் பொதுமக்கள் மனு செய்தனா்.

கரூா் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பின் செயலா் சதீஷ்கண்ணன் மற்றும் விஷ்வஹிந்த் பரிசத் அமைப்பின் பாலு ஆகியோா் தலைமையில் தோகைமலை அருகே உள்ள முதலைப்பட்டி கிராமமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் சமா்ப்பித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியில் உள்ள குளக்கரை அருகே அமைந்துள்ள செல்லாயிஅம்மன் கோயிலை இடிக்க சிலா் செய்த முயற்சியால் தற்போது நீதிமன்றம் கோயிலை அகற்ற உத்தரவிட்டுள்ளது. யாருக்கும் எந்த இடையூறும் இல்லாத கோயிலை அகற்றுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

ஆதித்தமிழா் முன்னேற்ற கழகத்தினா் சமா்ப்பித்த மனுவில், உள்ளாட்சித் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு இதுவரை நகராட்சி, பேரூராட்சிகளில் முறைப்படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியா் இதில் தலையீட்டு உரிய ஆய்வு செய்து, சட்டப்படி பட்டியல், மற்றும் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீட்டை பெற்றுத்தரவேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT