கரூர்

திருவிழாக்களில் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி மனு

DIN

கோயில் விழாக்களில் நடனக் கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் பண்பாட்டு மேடை நடனக் கலைஞர்கள் முன்னேற்றச் சங்கத்தினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
மனு விவரம்:
கரூர் மாவட்டத்தில் மேடை நடனக் கலைஞர்கள் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். 2017-ம் ஆண்டு முதல் தமிழக அரசிடம் முறையாகப் பதிவு பெற்று நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மேலும் நீதிமன்ற உத்தரவின்படி துளியும், ஆபாசம் இல்லாமல், நாகரிகமான முறையில் நிகழ்ச்சி நடத்துகிறோம். தற்போது கோயில் திருவிழா காலங்கள் தொடங்குவதால் நடனக் குழுக்களுக்கு உள்ளூர் காவல் நிலையங்களில் அனுமதி வழங்கி அனைவரையும் மகிழ்விக்கும் நடனக் கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்றனர்.
ஆதித்தமிழர் முன்னேற்றச் சங்கத்தினர் 
வழங்கிய மனுவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வரும் தேர்தலில் தவிர்க்க வேண்டும். மக்களின் பெரும்பான்மையான நம்பிக்கை கொண்டுள்ள வாக்குச்சீட்டு முறையை தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT