ஆச்சிமங்கலத்தில் நாளை மக்கள் தொடர்பு திட்ட முகாம்
ஆச்சிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
ஆச்சிமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
கரூர் வட்டம், தோரணக்கல்பட்டி குறுவட்டத்திற்குட்பட்ட ஆச்சிமங்கலம் கிராம விஏஓ அலுவலகம் அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெறும் முகாமில் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர்.
மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, ஆச்சிமங்கலம் கிராம பொதுமக்கள் அனைவரும் முகாமில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், கேட்டுக்கொண்டுள்ளார்.