முகப்பு
கரூர்

பைக்குகள் மோதல்: இருவர் சாவு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவர் இறந்தனர்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 8:50 am IST
பகிர்:

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்குகள் மோதிக் கொண்டதில் இருவர் இறந்தனர்.
கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு மகன் சுப்பிரமணி (30), கூலித் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை கொசூருக்கு பைக்கில்  சென்றுவிட்டு இரவு திரும்பிக் கொண்டிருந்தார்.  கடவூரை அடுத்த    கொசூர் சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் மகன் ஜெய்சங்கர் (25) தோகைமலையிலிருந்து கொசூரை நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். 
நாதிப்பட்டி களத்துமேடு அருகே வந்த இருவரது பைக்குகளும் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தகவலறிந்த தோகைமலை போலீஸார் சடலங்களை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.