கரூர்

ஆசிரியர் அங்கன்வாடி மையத்துக்கு இடமாற்றம்: குழந்தைகளுடன் பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

DIN

கரூர் மாவட்டம், புஞ்சைத் தோட்டக்குறிச்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் அங்கன்வாடி மையத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து,  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புஞ்சைத் தோட்டக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 57 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த நிலையில், அரசின் உத்தரவின்படி இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்த அம்பிகா, கிழக்குத் தவிட்டுப்பாளையம் அங்கன்வாடி மையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாராம்.
இதனால், தங்கள் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியை இல்லாததால் குழந்தைகளை திங்கள்கிழமை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர், பள்ளி முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுகுறித்து  தகவலறிந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தங்கவேல், தொடக்கக்கல்வி அலுவலர் கனகராஜ் ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுப் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டதால்தான் இங்கு மாணவர்களை அனுப்பினோம். இப்போது ஆசிரியை இல்லாத நிலையில் நாங்கள் ஏன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றனர் பொதுமக்கள்.விரைவில் ஆசிரியை நியமிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT