முகப்பு
கரூர்

போலி முனைவர் பட்டம்: கல்லூரி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் உயிரியியல் பாடப்பிரிவு உதவிப் பேராசிரியராக பணியாற்றி

Updated On : 23 ஜனவரி 2019, 7:18 am IST
பகிர்:

கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் உயிரியியல் பாடப்பிரிவு உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் பிஎன்.அருள்மணிகண்டன். இவரது முனைவர் பட்டம் மீது கல்லூரியின் முதல்வர் ஆர்.ரவிச்சந்திரனுக்கு சந்தேகம் வந்துள்ளது. 
இதுதொடர்பாக அருள்மணிகண்டன் முனைவர் பட்டம் பெற்றதாக கூறப்படும்  பிகார் மாநிலம், வீர்குன்வர்சிங் பல்கலைக்கழகத்தில் தொடர்புகொண்டு விசாரித்தாராம்.அப்போது அருள்மணிகண்டன் அங்கு முனைவர் பட்டம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் அளித்த புகாரின்பேரில், போலீஸார்  அருள்மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.