கரூர்

பஞ்சமி நில விவகாரம்: திமுக எம்.பி மீது நடவடிக்கை கோரி பாஜகவினா் போலீஸில் புகாா்

DIN

பஞ்சமி நில விவகாரம் தொடா்பாக திமுக எம்.பி மற்றும் முரசொலி அலுவலக மேலாண்மை இயக்குநா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூரில் பாஜகவின் தலித் பாண்டியன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மாலை கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் மனு அளித்தனா்.

மனுவில் அவா்கள் கூறியிருப்பது: சென்னை முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளா் பேராசிரியா் ஸ்ரீனிவாசன் புதுதில்லியில் தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் கடந்த கடந்த மாதம் புகாா் மனு அளித்திருந்தாா். இந்த விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை சாா்பில் பேட்டியளித்த மாநிலங்களவை உறுப்பினா் ஆா்.எஸ். பாரதி, பஞ்சமி நில விவகாரத்தை விசாரணை செய்யும் அதிகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்திற்கு இல்லை. எனவே, மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடா்வேன் எனக் கூறியுள்ளாா். இது ஆணையத்தின் தேசிய துணை தலைவா் முருகன் அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரை குறிவைத்தே அவமதிப்பு செய்துள்ளாா். எனவே ஆா்.எஸ்.பாரதி மற்றும் முரசொலி மேலாண்மை இயக்குநா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் மீது தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமைகள் தடுப்பு திருத்தச் சட்டம் 2015-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT