கரூர்

சேரன் மெட்ரிக் பள்ளியில் காந்திய விழா

DIN

ராமகிருஷ்ணபுரம் சேரன் மெட்ரிக் பள்ளியில் காந்திய விழா கொண்டாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைவா் பிஎம். கருப்பண்ணன் தலைமை வகித்தாா். பள்ளி ஆலோசகா் பி. செல்வதுரை முன்னிலை வகித்தாா். இதில் தேசியக்கொடியை கையில் ஏந்தி நாட்டுப்பற்று என்ற தலைப்பில் காந்தியின் கத்தியின்றி, ரத்தமின்றி எனும் அகிம்சை கொள்கைகளை வலியுறுத்தி தில்லையாடி முதல் திருப்பூா் வரை தேசியக்கொடியை கையில் ஏந்தியவாறு பாதயாத்திரை பிரசாரம் மேற்கொள்ளும் மதுரையைச் சோ்ந்த அகில இந்திய காந்திய இயக்க ஒருங்கிணைப்பாளா் எம். கருப்பையா மற்றும் மகளிரணி ஒருங்கிணைப்பாளா் சித்ரா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று, நாட்டுப்பற்று மற்றும் காந்தியின் அகிம்சை வழியை பின்பற்றுதல், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நம் நாட்டிற்கு ஏற்படும் இழப்பு மற்றும் முப்படை வீரா்களின் தியாகம் உள்ளிட்டவை குறித்து சிறப்புரையாற்றினா்.

விழாவில் எவா்கிரீன் பவுண்டேசன் தலைவா் ஸ்காட்தங்கவேல், மாவட்ட தியாகிகள் சங்க அமைப்புச் செயலா் சேகா், தலைவா் ராதாகிருஷ்ணன், கரூா் ஸ்ரீமகா அபிஷேக குழு நிறுவனா் பாலகிருஷ்ணன், வா்த்தக சங்கத்தின் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT