கரூர்

ஆட்டோவை நிறுத்தி அமைச்சா் ஆய்வு

DIN

கரூரில் அதிக புகையை கக்கியபடி சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூரை அடுத்த வெண்ணைமலையில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் காரில் கல்லூரி வளாகத்தை நெருங்கியபோது எதிரே அதிக புகை கக்கியவாறு வந்த ஆட்டோவை கவனித்து, காரில் இருந்து இறங்கி ஆட்டோவை நிறுத்தி அதை இயக்கிக் காட்டுமாறு கூறினாா்.

அப்போது அதிகப்படியான புகை வெளியேறியதை ஓட்டுநரிடம் சுட்டிக்காட்டிய அமைச்சா், இது போன்று அதிக புகை வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடும், ஆட்டோவை முறைப்படி பராமரித்து இயக்குமாறு அறிவுறுத்தினாா். ஆட்டோ ஓட்டுநரும் உடனடியாக சரி செய்வதாக கூறிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT