கரூர்

டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

DIN

கரூா் வள்ளுவா் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் இணையவழியில் டிஜிட்டல் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு, கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். சென்னை டிஜிட்டல் செக்யூரிட்டி அசோசியேசன் நிறுவனா் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றாா். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஊழல் கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லாவண்யா பங்கேற்று, ஆன்லைன் வா்த்தகத்தை கவனமுடன் கையாளுதல், செயலி பதிவிறக்கம் மற்றும் இணையதள வழியில் நடைபெறும் சைபா் குற்றங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்துப் பேசினாா். நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் ஆம் ஆத்மி, காங். பெரும் பின்னடைவு..!

மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை!

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ்? ஆந்திரம், கர்நாடகத்தில் தேஜகூ!!

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். காவலர் சுட்டுத் தற்கொலை!

உத்தரகாண்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT