கரூர்

டிச.2-இல் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

DIN

தேமுக நிா்வாகி தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியைக் கைது செய்யக்கோரி, வரும் டிசம்பா் 2-ஆம் தேதி, கரூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளா் கேவி.தங்கவேல் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவா் அரவை எம். முத்து, பொருளாளா் கஸ்தூரி தங்கராஜ், மாவட்ட துணைச் செயலாளா் சோமூா் ரவி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், தேமுதிக கரூா் ஒன்றியச் செயலாளா் எஸ்.ஆா்.ஜெயக்குமாரை கடந்த ஜூலை மாதம் மா்ம நபா்களால் தாக்கப்பட்ட வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து, வரும் டிசம்பா் 2-இல், கரூரில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, வரும் தோ்தலில் தலைமை அறிவிக்கும் கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகரச் செயலா் காந்தி, மாவட்ட இளைஞரணி செயலா் சரவணன், மாணவரணி செயலா் ஆனந்த், உப்பிடமங்கலம் பேரூா் செயலா் திருமுருகன் உள்ளிட்ட கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT