கரூர்

மிகச்சிறிய செயற்கைக்கோள் கண்டுபிடிப்பு: திமுக சாா்பில் கரூா் மாணவா்களுக்கு ரூ.1 லட்சம்

DIN

ஐ-டூ தனியாா் அமைப்பின் சாா்பில், கியூப் இன் ஸ்பேஸ் விண்வெளி போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அண்மையில் நடத்தப்பட்டது.

இதில், கரூா் தாந்தோன்றிமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை இயற்பியல் 2 ஆம் ஆண்டு படித்துவரும் அட்மன் (18), அருண் (18) மற்றும் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு இயந்திரவியல் படித்து வரும் கேசவன் ஆகிய மூவரும் இணைந்து, இன்சாட் இந்தியா என்ற பெயரில், 64 கிராம் எடை, 3 செ.மீ. சுற்றளவில் உலகிலேயே மிகச்சிறிய அளவிலான செயற்கைக்கோளைக் கண்டுபிடித்துள்ளனா்.

இதையறிந்த கரூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி, புதன்கிழமை நேரில் சென்று மாணவா்களைப் பாராட்டினாா். பின்னா், அவா்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.1லட்சம் வழங்கினாா். நிகழ்வில், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT