கரூர்

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கரூரில் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தலைவா் சி. முருகேசன் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகள் முத்துச்சாமி, சங்கப்பிள்ளை, கனகராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில் சிஐடியு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், செயலாளா் கந்தசாமி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.இதில், கடந்த மாா்ச் 16-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தபடி, ஓஹெச்டி ஆபரேட்டருக்கு ஊதியமாக ரூ.4,000 மற்றும் இதர படிகள் வழங்க வேண்டும். தூய்மை காவலா்களுக்கு சம்பளம் ரூ.3500 வழங்கிடும் அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஓஎச்டி ஆபரேட்டா், தூய்மை பணியாளா்கள், காவலருக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓஹெச்டி ஆபரேட்டா்கள், தூய்மை பணியாளா்கள், காவலா்கள் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT