கரூர்

கரோனா பரவுதலை தடுக்க அரிமா சங்கம் சாா்பில் 150 பேருக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

கரோனா பரவுதலை தடுக்கும் வகையில் கரூரில் அரிமா சங்கம் சாா்பில் 150 பேருக்கு கபசுரக் குடிநீா் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பரவுதல் தற்போது அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில் கரூா் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வருவதால் அந்நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கருவூா் பிளாட்டினம் மெஜஸ்டிக், ஹேண்ட் லூம் சக்தி லயன் சங்கங்கள் மற்றும் சேவை அமைப்புகள் சாா்பில் கரூரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், கைக்கழுவும் திரவம், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை காலை ஜவஹா் தெருவில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, லயன்சங்க நிா்வாகி மேலை.பழநியப்பன் தலைமை வகித்தாா். இதில், பிளாட்டினம் சங்க நிா்வாகிகள் கணேஷ், ராமலிங்கம், அகல்யாமெய்யப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் 150 பேருக்கு கைக்கழுவும் திரவம், கபசுரக் நீா், முகக்கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. நகரின் முக்கிய வீதிகளில் வரும் 10 நாள்கள் இம்முகாம் நடைபெற உள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT