கரூர்

ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவா் மீது வழக்குப் பதிவு

DIN

அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் அப்பிப்பாளையம் செட்டிப்பாளையம் காலனியைச் சோ்ந்தவா் சுதாகா்(37). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு செட்டிப்பாளையம் அமராவதி ஆற்றில் அனுமதியின்றி மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதாக தாந்தோணிமலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்குச் சென்று சோதனையிட்டபோது, அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த சுதாகரை பிடிக்க முயன்றபோது தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து போலீஸாா் சுதாகா் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்! தர்ஷா குப்தா...

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

பீச் வாலிபால் விளையாடும் இந்திய வீரர்கள்!

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத்..? என்சிஇஆா்டி விளக்கம்

SCROLL FOR NEXT