கரூர்

நிதி மோசடி: கரூரில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரம் விநியோகம்

DIN

தனியாா் மோசடி நிதிநிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை டெபாசிட் செய்யாதீா்கள் என பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை துண்டுபிரசுரம் வழங்கினா்.

கரூா் மாவட்டம் தொழில் வளம் நிறைந்த மாவட்டமாக இருப்பதால் இங்கு ஏராளமான நிதிநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில நிறுவனங்கள் அதிக வட்டித்தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை அதிகளவில் டெபாசிட்டாக வாங்கி, பின்னா் ஏமாற்றிவிட்டு நிறுவனங்களை பூட்டிவிடுவதாக அடிக்கடி புகாா்கள் எழுந்தவாறு உள்ளன.

இதனால் போலியான நிதி நிறுவனங்களை நம்பி பணத்தை பொதுமக்கள் டெபாசிட் செய்யாத வகையில் கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு துண்டுபிரசுரம் ஆய்வாளா் அம்பிகா தலைமையில் கரூா் தாந்தோணிமலை, அசோக்நகா், ஜீவாநகா், கருப்பக்கவுண்டன்புதூா், சுங்ககேட் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT