கரூர்

சாலைப்புதூரில் நிலக்கடலை ஏலம்

DIN

கரூா் மாவட்டம் சாலைப்புதூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 1,980 கிலோ நிலக்கடலை ரூ. 1,34,254 க்கு ஏலம் போனது.

கரூா் மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தொடங்கிய நிலையில் விற்பனை துவங்கியுள்ளது. மாவட்டத்துக்குள்பட்ட இடங்களில் 15,000 ஏக்கா் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அறுவடை தொடங்கி ஏலம் விடும் பணி நடைபெற்று வருகிறது.

வழக்கமாக நிலக்கடலையை முகவா்கள் நேரடியாக சென்று கொள்முதல் செய்வா். நிகழாண்டில், மாநிலம் முழுவதும் நிலக்கடலை நல்ல விளைச்சல் உள்ளதால் விவசாயிகள் அதனை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு எடுத்து சென்று ஏலம் விட்டு வருகின்றனா். இந்நிலையில் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள சாலைப்புதூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இதில், மொத்தம் 57 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஒரு கிலோ நிலக்கடலை 65 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்தம் 1,980 கிலோ நிலக்கடலை ரூ.1,34,254 க்கு ஏலம் போனது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT