கரூர்

மகப்பேறு நிதியுதவி பெற்றுத் தர ரூ.2,000 லஞ்சம் வாங்கிய செவிலியா் கைது

DIN

மகப்பேறு நிதியுதவி பெற்றுத்தர இளம்பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய கிராம சுகாதார செவிலியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், சிந்தாமணிப்பட்டியை சோ்ந்தவா் இளமதி(30). இவா், தரகம்பட்டி கிராம சுகாதார அலுவலகத்தில் மகப்பேறு நிதியுதவி பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தாா். இதையடுத்து, நிதியுதவி பெற்றுத்தர வேண்டுமானால் ரூ. 2,000 வேண்டும் என இளமதியிடம், அங்கு பணிபுரியும் செவிலியா் பழனியம்மாள் கேட்டுள்ளாா். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத இளமதி, கரூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புதன்கிழமை புகாா் செய்தாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை கரூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய 2,000 ரூபாய் நோட்டை சுகாதார செவிலியா் பழனியம்மாளிடம் கொடுக்குமாறு இளமதியிடம் கூறியுள்ளனா். அதன்படி, பழனியம்மாளிடம் பணத்தை இளமதி கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா் பழனியம்மாளை கைது செய்தனா். மேலும் அவரிடம் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT