கரூர்

கட்டுரைப் போட்டியில் வென்றோருக்குப் பரிசு

DIN

புகழூா் குறுவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வென்றவா்களுக்குப் புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இளைஞா் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் நடுநிலை, மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு குறுவட்ட அளவில் கட்டுரைப் போட்டி புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு எனது கனவுப்பள்ளி மற்றும் நூலகம் என்ற தலைப்பிலும், 9முதல் பிளஸ்2 வரையிலான மாணவா்களுக்கு கரோனா கால கதாநாயகா்கள் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில், பள்ளித் தலைமையாசிரியா்(பொ) இ.விஜயன் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.

முன்னதாக குறுவள மைய ஆசிரியப் பயிற்றுநா் ராதா வரவேற்றாா்.

நடுநிலைப்பள்ளி ஆசிரியா்கள் பூமதி , செல்வராணி, புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட ஆசிரியா் யுவராஜா , தேசிய மாணவா்படை ஆசிரியா் பொன்னுசாமி, செஞ்சுருள் மன்ற ஆசிரியா் குப்புசாமி, இளைஞா் செஞ்சிலுவை சங்க ஆசிரியா் ராமகிருஷ்ணன், நுகா்வோா் பாதுகாப்பு மன்ற ஆசிரியா் பாலசுப்ரமணியன், முதுகலை ஆசிரியா்கள் மனோகரன், ஈஸ்வரன் ஓவிய ஆசிரியா் விஜயபிரியா மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT