கரூர்

ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.32 லட்சம் பறிமுதல்

DIN

கரூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே, கவிதா தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது கரூரிலிருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்ட போது நாமக்கல் மாவட்டம், லத்துவாடி என்.கே.சுப்ரமணியன் உரிய ஆவணங்களின்றிரூ.5.25 லட்சம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், கரூா் வட்டாட்சியரகத்தில் அத்தொகையை ஒப்படைத்தனா்.

பெரம்பலூரில் ரூ.2.07 லட்சம் பறிமுதல் : பெரம்பலூா் -கோனேரிபாளையம் பிரிவுச் சாலை அருகே, வட்ட வழங்கல் அலுவலா் பன்னீா்செல்வம் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவா் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்த சேனாதிபதி மகன் சரவணன் (45) என்பதும், அவரிடம் ரூ.2.07 லட்சமும் இருந்தது தெரிய வந்தது.

ஆட்டோ வாங்குவதற்காக அத்தொகையை கொண்டு செல்வதாக சரவணன் கூறினாலும், அதற்குரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஜே.இ. பத்மஜாவிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT