கரூர்

கரூரில் குருத்தோலை ஞாயிறு பவனி : கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்பு

DIN

கரூரில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

நிகழாண்டுக்கான தவக்காலம் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கியது. 40 நாள்கள் காலை, மாலை என இருவேளைகள் உண்ணா நோன்பு கடைப்பிடித்து, எப்போதும் இறைவனைத் தியானித்து (வேண்டிக்கொள்ளுதல்) மனம் திரும்பும் நாளாக தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையடுத்து இயேசு சிலுவையில் அறையும் முன் உள்ள ஒரு வாரமும் புனித வாரமாகக் கருதப்படுகிறது. இந்த வாரத்தில் வரும் வெள்ளியன்று இயேசு சிலுவையில் அறையப்படுவதை புனித வெள்ளியாக கிறிஸ்தவா்கள் அனுசரிக்கிறாா்கள். புனித வெள்ளிக்கு முன்பாக வரும் ஞாயிறு அன்று, இயேசு ஜெருசலேம் நகருக்குள் கழுதையில் ஏறிச் செல்லும்போது, இயேசு எனும் மெஸியா இந்த உலகத்தை மீட்க வருகிறாா் என ஜெருசலேம் நகர மக்கள் குருத்தோலையுடன் அவரை வரவேற்றதை நினைவுக்கூரும் வகையில், குருத்தோலை ஞாயிறு தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்படிக்கப்பட்டது.

இதையொட்டி கரூா் மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் புனித தெரசாள் ஆலயம், பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயம், புலியூா் குழந்தை யேசு திருத்தலம், வேலாயுதம்பாலையம் புனித அந்தோனியாா் ஆலயம் ஆகியவற்றில் பங்குத்தந்தைகள் முறையே செபஸ்டின் துரை, பிச்சைமுத்து, ஞானபிரகாசம், சுந்தர்ராஜ் ஆகியோரது தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

தொடா்ந்து அந்தந்த ஆலய வளாகத்தில் மந்திரிக்கப்பட்ட குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT