கரூர்

இரு சக்கர வாகனம் மோதிமாற்றுத் திறனாளி உயிரிழப்பு

DIN

கரூா்: கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சோ்ந்தவா் துரைராஜ் (70). மாற்றுத் திறனாளியான இவா், தனது மூன்று சக்கர மோட்டாா் சைக்கிளில் சேலம்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா்.

துளிப்பட்டி பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் துரைராஜ் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளையப்பேட்டை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா

தமிழ்ப் பல்கலை.யில் பி.எட்., எம்.எட். விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

ரிசர்வ் வங்கியின் தங்கமான முடிவு

தனியாா் மருந்து கிடங்கில் தாய்ப்பால் பாட்டில்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

இன்று வாக்கு எண்ணிக்கை: வேலூா் வாக்கு எண்ணும் மையத்தில் 700 போலீஸாா் பாதுகாப்பு

SCROLL FOR NEXT