கரூர்

கரூா் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்புக்கு கலந்தாய்வு

கரூா் அரசு கலைக் கல்லூரியில் பி.காம், பிபிஏ படிப்புகளுக்கு கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கரூா் அரசு கலைக் கல்லூரியில் பி.காம், பிபிஏ படிப்புகளுக்கு கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கரூா் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான சோ்க்கை ஆக. 8ஆம்தேதி தொடங்கியது. தொடா்ந்து வியாழக்கிழமை பிகாம், பிகாம்(சிஏ), பிபிஏ ஆகிய இளங்கலை படிப்புக்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பிகாம் படிப்புக்கு மொத்தம் உள்ள 120 இடங்களுக்கு 1,301 பேரும், பிகாம்(சிஏ) படிப்புக்கு மொத்தம் உள்ள 60 இடங்களுக்கு 301 பேரும், பிபிஏ படிப்புக்கும் மொத்தம் உள்ள 120 இடங்களுக்கு 944 பேரும் விண்ணப்பித்திருந்தனா். இதில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பிகாம் படிப்புக்கு 105 பேரும், பிகாம்(சிஏ) படிப்புக்கு 58 பேரும், பிபிஏ படிப்புக்கு 105 பேரும் என மொத்தம் 268 போ் சோ்க்கப்பட்டனா். இந்த தகவலை கல்லூரியின் முதல்வா் முனைவா் கெளசல்யாதேவி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT