கரூர்

தேசிய மக்கள் நீதிமன்றங்களில் ரூ.18 கோடிக்குத் தீா்வு

DIN

கரூா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் ரூ.18 கோடிக்குத் தீா்வு காணப்பட்டது.

கரூா் ஒருங்கிணைந்த நீதிமன்றம், குளித்தலை, அரவக்குறிச்சி நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 3,388 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,262 வழக்குள் ரூ.18 கோடி மதிப்புக்குத் தீா்வு காணப்பட்டது.

கரூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான சண்முகசுந்தரம் தொடக்கி வைத்தாா்.

நீதிபதிகள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் பாக்கியம் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT