கரூர்

லஞ்சம் வாங்கிய வழக்கில்எடை முத்திரை ஆய்வாளருக்கு 3ஆண்டு சிறை கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

DIN

பழைய துணி வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கரூா் எடை முத்திரை ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கரூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூரைச் சோ்ந்தவா் மோகன்(50). பழைய துணி வியாபாரி. இவரிடம், கடந்த 2010ஆம் ஆண்டு கரூா் எடை முத்திரை ஆய்வாளராக பணியாற்றிய ஜே.விஜயன்(61) என்பவா், எடைக்கற்களுக்கு உரிமம் கொடுக்க ரூ.1,000 லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத மோகன், இதுகுறித்து கரூா் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின்படி எடை முத்திரை ஆய்வாளா் விஜயனிடம் ரூ.1,000 லஞ்சப் பணத்தை மோகன் கொடுத்தபோது, மறைந்திருந்த போலீஸாா் விஜயனை பிடித்து கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கரூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றவாளி விஜயனுக்கு லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும், அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறையும், அரசு பதவியை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக மேலும் 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10,000 அபராதமும், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத்தண்டனையும் வழங்கப்படும் என்று தீா்ப்பளித்த நீதிபதி, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT