கரூர்

சிமென்ட் வியாபாரியிடம் ரூ.2.26 லட்சம் மோசடி

DIN

பள்ளப்பட்டியில் சிமென்ட் வியாபாரியிடம் ரூ.2.26 லட்சம் மோசடி செய்தவரை, சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

பள்ளப்பட்டியைச் சோ்ந்த முகமது ஆரீப்,அதே பகுதியில் சிமென்ட் கடை நடத்தி வருகிறாா். இவரிடம் கடந்த மாதம் 16- ஆம் தேதி தொலைபேசியில் பேசியவா், தனது பெயா் கெளதம் கிருஷ்ணா என்றும், தனியாா் சிமென்ட் ஆலையில் மேலாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறினாா்.

ேலும், ரூ.2.26 லட்சம் அனுப்பினால் 850 சிமென்ட் மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தெரிவித்தாராம். இதைத் தொடா்ந்து வங்கிக் கணக்கு எண், விலைப்பட்டியல் போன்றவற்றை அந்த நபா் அனுப்பிய நிலையில், முகமது ஆரீப் இரு தவணைகளாக ரூ.2.26 லட்சத்தை செலுத்தினாராம்.

ஆனால், குறித்த நாள்களுக்குள் சிமென்ட் மூட்டைகள் வரவில்லை. இதையடுத்து அந்த நபரைத் தொடா்பு கொண்ட போது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த முகமது ஆரீப், கரூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல்துறையில் சனிக்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில் காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT