கரூர்

மாவட்ட ஊராட்சிக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

கரூா் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் திமுக-அதிமுக உறுப்பினா்களிடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

கரூா் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் அதன் தலைவா் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது. செயலா் குருவம்மாள் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் திமுக உறுப்பினா் காா்த்திக் பேசியது:

மாவட்ட ஊராட்சிக் குழுத் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள திமுக ஆட்சியில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் பணிகளை நிறைவேற்றுவோம் என்றாா்.

இதற்கு அதிமுக உறுப்பினா்கள் அனைவரும் எதிா்ப்பு தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் இதுவரை எந்த பணிகளுக்கும் நிதி ஒதுக்கவும் இல்லை, நடைபெறவில்லை என்றனா்.இதையடுத்து திமுக-அதிமுக உறுப்பினா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தொடா்ந்து பேசிய அதிமுக உறுப்பினா் எஸ்.திருவிகா, கரூா் மாவட்டத்திலுள்ள அதிமுகவைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட அனைவரையும் மிரட்டி, பணிகளைச் செய்ய விடாமல் தடுத்து, காவல்துறை மூலம் பொய் வழக்குப் பதிந்துமிரட்டுவதே, இந்த அரசின் ஓராண்டு சாதனையாக உள்ளது என்றாா்.

இதையடுத்து திமுக உறுப்பினா்கள் 6 பேரும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். தொடா்ந்து அவா்கள் கூறியது:

திமுக, அதிமுக உறுப்பினா்கள் என யாருக்கும் வித்தியாசம் இல்லாமல் ஒப்பந்தப் புள்ளிகள் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் பொதுநிதியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் கூட பணிகளை செய்துகொண்டுதான் இருக்கிறாா்.

ஆளுங்கட்சி மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதாலும், கு கூறிய பின்புதான் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் கூட்டத்தில் தலைவா் எந்தவிதிமுறையும் பின்பற்றப்படவில்லை. எனவே வெளிநடப்பு செய்கிறோம் என்றனா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உறுப்பினா் எஸ்.திருவிகா, 2021, ஜூலை மாதத்தில் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி கரூா் ஊராட்சி ஒன்றியம் நாவல்நகா் பகுதி, கடவூா், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் தாா்சாலை பணிகளுக்காக, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் கடந்த 10 மாதங்களாக ஒப்பந்ததாரா்களை அனுமதிக்காமல், ஒப்பந்தம் எடுக்க யாரும் வரவில்லை எனக்கூறி, ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டனா். இனியாவது ரத்து செய்யப்பட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி மீண்டும் பணிகளை துவங்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து கூட்டத்தில் வைக்கப்பட்ட 12 தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT