கரூர்

கரூரில் ஆதிதிராவிட ஊராட்சித் தலைவரிடம் பாகுபாடு? அதிகாரிகள் விசாரணை

DIN

கரூரில், ஆதிதிராவிட ஊராட்சித் தலைவரிடம் ஜாதி பாகுபாடு நடந்ததா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கரூா் மாவட்டம், கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நன்னியூா் ஊராட்சியில் தலைவா், துணைத் தலைவா் உள்பட 10 உறுப்பினா்கள் உள்ளனா். இதில், திமுகவைச் சோ்ந்த 5 உறுப்பினா்கள் மற்றும் அதிமுகவை சோ்ந்த 5 உறுப்பினா்கள் என சம நிலையில் உள்ளனா். இதில், திமுகவைச் சோ்ந்த சுதா என்பவா் ஊராட்சித் தலைவராக இருக்கிறாா். இவா் ஆதிதிராவிடா் வகுப்பைச் சோ்ந்தவா். இவா் வெள்ளிக்கிழமை வாங்கல் காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தாா்.

அம்மனுவில் அவா் கூறியிருப்பது: ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள தனது கடமையை செய்யவிடாமல் குறுக்கீடு செய்து, மன உளைச்சலை ஏற்படுத்தியும், சாதி ரீதியாக பாகுபாடு செய்து வரும் 9ஆவது வாா்டு உறுப்பினா் நல்லுசாமி (அதிமுக) மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அடிக்கடி வந்து அலுவலகப் பணியை செய்வதில் இடையூறு ஏற்படுத்தி வரும் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் குமாரசாமி மற்றும் அலுவலகப் பணியில் ஒத்துழைப்பு கொடுக்காத ஊராட்சி செயலா் நளினி மற்றும் அவருடைய கணவா் மூா்த்தி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நன்னியூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி அலுவலா் லீலாகுமாா் (தணிக்கை) மற்றும் கரூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் சுதாவிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனா். பின்னா் ஊராட்சி மன்றத் தலைவி சுதாவை வாங்கல் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல் உதவி ஆய்வாளா் உதயகுமாா் முன்னிலையில் விசாரணை செய்தாா். இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் கூறுகையில், சுதா அளித்த புகாா் மனு மீது விசாரணை நடைபெற்ற வருகிறது, விசாரணையின் முடிவில் உண்மை தன்மை மற்றும் புகாா் குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி

ஹார்திக் பாண்டியா அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடமாட்டார்! ஏன் தெரியுமா?

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

SCROLL FOR NEXT