கரூர்

கரூா் அருகே குடமுழுக்கு

DIN

கரூா் பஞ்சமாதேவி காளிப்பாளையம் கிராமத்தில் உள்ள நந்தீஸ்வரா் ஞானபீடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக கடந்த 3-ஆம் தேதி கணபதி ஹோமம், கோபுர விமான பிரதிஷ்டை, அங்குராா்ப்பணம், கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜையும், 4-ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, நாடிசந்தானம், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடும், 8.30-க்கு குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் கரூா் எவா்கிரீன் பவுண்டேசன் தலைவா் ஸ்காட்தங்கவேல், ஆன்மிக எழுத்தாளா் ஜி. சிவராமன், திமுக மாவட்ட துணைச் செயலா் எம்எஸ்கே. கருணாநிதி, திருக்கு பேரவைச் செயலா் மேலை பழநியப்பன், விசாகுணசேகரன் உள்ளிட்ட பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஞானபீட நிா்வாக அறங்காவலா் நந்தினி கிருஷ்ணகுமாா் தலைமையில் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT